Wednesday, January 20, 2010

ஜனநாயகத்தை நிலைநாட்டவே ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்கிறோம் - இராமலிங்கம் சந்திரசேகரன்



மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரனுடன் உரையாடல்

இலங்கையின் ஜனாதிபதித்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத்தளபதியும் முப்படைகளின் கூட்டுத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவும் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கியிருக்கிறார்கள். யுத்தக் குற்றவாளிகளாக கருதப்படுகிற இவர்கள் இருவரும் யுத்த வெற்றியை முன்னிருத்தியே தங்கள் பிரசாரங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் இருவருக்கும் இடையிலான மோதல் நிலை தீவிரம் பெற்றிருக்கிறது. யார் ஆதரிப்பது என்ற நிலையில் அரசியல் கட்சிகளும் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் மக்களும் இருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற சில கட்சிகள் இணைந்து மகிந்தாராஜபக்ஷவுக்கு எதிராக தங்கள் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத்பொன்சேகாவை களம் இறக்கியிருக்கிறார்கள்.



மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரே தமிழர். பண்டாரவலயில் பிறந்து வளர்ந்தவர். இவர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார். ஆட்சி மாற்றம் ஒன்றின் முலமே அமைதியைக்கொண்டு வர முடியும் எனறு கூறுகிற இராமலிங்கம் சந்திரசேகரன் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே சரத்பொன்சேகாவை ஆதரிக்கிறோம் என்று சொல்கிறார். அடுத்த ஜனாதிபதியாக சரத்பொன்சேகா ஆட்சிபீடம் ஏறுவார் என்றும் அவர் நிறைவேற்று ஜனாதிபதி முறமையை ஒழிப்பார் என்றும் கூறுகிறார். இந்த தேர்தல் நிலமைகள் பற்றியும் கடந்த கால அரசியல் நிலரங்கள் பற்றியும்; இலங்கையின் பாராளமன்ற உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரனுடன் உன்னதம் இதழுக்காக இந்த உரையாடலைச் செய்திருந்தேன்.

01
தீபச்செல்வன்:

இந்தத் தேர்தலில் நீங்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறமையை ஒழிப்பதற்காக ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக சொல்லுகிறீர்கள். இதுபோல கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷவுடன் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் தோல்வியில் முடிந்துபோயிருந்தது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு வேட்பாளர்களையும் யுத்தக் குற்றவாளிகளாகவே பார்கின்ற நிலையில் உங்களது நிலைப்பாடு சர்ச்சைக்குரியதாகவும் சிக்கலுக்குரியாதகவும் இருக்கிறதே?

இராமலிங்கம் சந்திரசேகரன்

நடைப்பெறப்போகிற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சரத்பொன்சேகா அவர்களை ஆதரிக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியானது ஒரு இடதுசாரிக் கட்சி. ஒரு இடதுசாரிக்கட்சி ஒரு இராணுவத்தளபதியைத் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வது என்பது சர்ச்சைக்குரிய விடயம்தான் இதில் எந்த வாதமும் கிடையாது. ஆனாலும் நாட்டின் யதார்த்த நிலமைகள் எவ்வாறு இருக்கின்றது என்று பார்க்க வேண்டும். அந்த யதார்த்த நிலமையில்தான் இன்று நாங்கள் சரத்பொன்சேகாவை ஆதரித்து நிற்கின்றோம். ஆனால் கடந்த காலங்களில் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி வாக்குறுதிகளை பெற்றுக் கொண்டு நாட்டின் ஜனாதிபதிகளை உருவாக்கிய வரலாறும் இருக்கிறது. ஆனால் 2005ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணிக்கும் மகிந்தாரஜபக்ஷவுக்கம் இடையில் உடன்படிக்கை ஒன்று செய்து கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையில் 7ஆவது கோரிக்கையாக இம்முறை பதிவிக்காலத்தோடு நிறைவேற்று ஜனாதிபதி முறமையை ஒழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்திருந்தது. அதற்கு அவர் இணக்கம் தெரிவித்து பின்னர் அவரால் உருவாக்கப்பட்ட கொள்கை பிரகடனமான ‘மகிந்த சிந்தனை’யில் உள்ளடக்கி மக்களிடம் சென்று வாக்குறுதி அளித்து வாக்குகளை கேட்டார். மக்களுக்கு உறுதியளி;திருந்தார்.

மக்களுக்கு உறுதியளித்தவற்றை நிறைவேற்றாது இன்று மறுபடியும் மகிந்தராஜபக்ஷ ஜனனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றார். இவ்வாறான சூழ்நிலையில்தான் மக்கள் விடுதலை முன்னணியான நாங்கள் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறோம். 2005ஆம் ஆண்டு மக்களுக்கு வாக்கறுதி வழங்கி மக்கள் ஆனையைப் பெற்றுக்கொண்டு பின்னர் அதை மீறி செயற்படுகின்ற ஜனாதிபதிதான் இந்ததத் தேர்தல் களத்தில் இருக்கின்றார். மக்களுக்கு பொய்வாக்குறுதி அளித்த மக்களை ஏமாற்றிய ஒருவர்தான் இந்தக் களத்தில் இருக்கின்றார். ஆகவேதான் இந்த ஜனாதிபதிக்கு இம்முறை மக்களிடம் வாக்கு கேட்பதற்கு அருகதையில்லை என்பதை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.

மகிந்ராஜபக்ஷ அவர்கள், கடந்த ஆறு மாதத்திற்கு முதல் நடத்த யுத்தவெற்றியோடு நாட்டில் ஜனாதிபதியாக அல்ல மாகாராஜாவாக மாறிவிட்டார். மன்னராக மாறிவிட்டார். அப்படியிருந்து கொண்டு யாருடைய கதைகளுக்கும் செவிமடுக்காமல் தான் தோன்றித்தனமான முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தார். இவர் மீண்டும் ஜனாதிபத் தேர்தலை நடத்த தீர்மானித்தபோது. ஐய்யா மகிந்தராஜபக்ஷ அவர்களே ஜனாதிபத்; தேர்தலை மீண்டும் நடத்த வேண்டாம் என்று எங்கள் கட்சியின் செயலாளர் கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். எனக்கும் உனக்கும் 2005ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி நிறைவேற்று அதிகார முறமை ஒழிக்கப்படவேண்டுமே ஒழிய இனியும் ஒரு ஜனாதிபதித் தேர்தலை நடத்த கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதை அவர் கனவத்தில் எடுக்கவில்லை. பின்னர் கட்சி மாநாடு ஒன்று நடத்தி இதனைத் தெரிவித்திருந்தோம். பின்னர் நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியும் கொழும்பில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சென்று ஆட்பார்ட்டங்களை நடத்தியும் தெரிவித்திருந்தோம். மக்கள் ஆனையை மீறுவாய் என்றால் நிச்சயமாக உன்னை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தெரிவித்திருந்தோம். அதற்கு பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வோம் என குறிப்பிட்டோம். அதை மகிந்தாராஜபக்ஷ அவர்கள் கணக்கில்கூட எடுக்கவில்லை. ஜே.வி.பியால் அப்படி ஒரு பொதுவேட்பாளரை நியமிக்க முடியுமா? அல்லது மகிந்தராஜபக்ஷவுக்கு போட்டியிடக்கூடிய தகுதி உள்ளர் யாராவது இருக்கிறரா? என்ற வாதங்களுடன் அவர் இருந்தார்.

இப்படியான சூழ்நிலையில்தான் மகிந்தராஜபக்ஷவுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அப்பொழுது இதற்கு மாற்றமான நடவடிக்கை ஒன்றுக்கு செல்ல வேண்டிய தேவை சரத்பொன்சேகா அவர்களுக்கும் இருந்தது. சரத்பொன்சேகா அவர்கள் ஜனாதிபத்தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்று கதைகள் வந்திருந்தன. அப்பொழுது வெறுமனே தனியாக ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட மகிந்தராஜபக்ஷவுக்கு இணையாக பேட்டியற்ற களத்தை போட்டிக் களமாக மாற்ற வேண்டிய தேவை எங்களுக்கு இருந்தது. இதன் காரணமாகவே மக்கள் விடுதலை முன்னணி சரத்பொன்சேகாவை களத்தில் இறக்கியிருக்கிறது. தனியாக பேட்டியிட்டு இந்தத் தேர்தலில் எங்களால் எதையும் சாதிக்க முடியாது. ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது எங்கள் கொள்கைக்கு ஒத்தவராது. மகிந்தவையும் ஆதரிக்க முடியாது.

இப்படியான நிலையில் வெறுமனே நூற்றுக்கு 70 அல்லது 80 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டு தனது குடும்ப ஆதிக்கத்தை நாட்டின்மீது சர்வாதிகாரமாக நிலைநாட்டி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளுவதற்கான பேராசை மிக்க ஆட்சியை நடத்துவதற்கு ஏதுவான களம் ஏற்பட்டிருக்கும். நாஙகள் இந்தக் களத்தில் கட்சி சாராத பொதுவேட்hளர் ஒருவரை தெரிவு செய்தால் அது நாட்டிற்கு நன்மை பயக்கக்கூடிய விடயம் என்று கருதினோம். இப்படியான பொதுவேட்பாளரை நாங்கள் 1980 களிலிருந்து தேடி வந்தோம். இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறமையை நிர்மானித்த ஐக்கிய தேசியக் கட்சியும் கூட அதற்கு எதிராக திரும்பியிருக்கிறது. ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் குறுகிய காலத்தில் நாட்டின் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்வதற்கான நடவடிக்கைகைள எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். இந்த நாட்டில் ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்தவற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகின்றோம்.

02
தீபச்செல்வன்:

கடந்த காலத்தில் நடந்த யுத்ததில் யுத்தக் குற்றங்கள் நிறையவே நடைபெற்றிருக்கிறது. இது சிங்கள மக்களுக்கு இராணுவ வெற்றியாக இருக்கலாம். தமிழ் மக்களுக்கு இது மறக்க முடியாத சோகத்தையும் இழப்பையும் வழங்கியிருக்கிறது. இங்கு களத்தில் போட்டியிடுகிற இரண்டு முக்கியமான வேட்பாளர்களும் யுத்தக் குற்றத்தில் சம பங்கு வகிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்படிhன நிலையில் உங்களால் ஜெனரல் சரத்பொன்சேகாவை வைத்து எப்படி ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என்று கருதுகிறீர்கள்?

இராமலிங்கம் சந்திரசேகரன்:

இந்த யுத்தக் குற்றம் சம்பந்தமாக பேசுபவர்கள் வேறு யாருமில்லை அமெரிக்கா, ஐ.நா, மற்றும் சில மேற்குலகநாடுகள். இந்த நாடுகளுக்கு இலங்கையில் யுத்த குற்றம் பற்றி விசாரணை செய்வதற்கு என்ன அருகதையிருக்கிறது? யுத்தக் குற்றம் புரியாமல் இருக்கின்ற மனிதாபிமானத்துடன் நடக்கின்ற நபர்கள் கேட்பார்கள் என்றால் இதற்கு பதில் அளிக்க வேண்டிய தேவையுள்ளது. இலங்கையில் யுத்த காலத்தைக் காட்டி தங்கள் அரசியல் இருப்புகளையும் நகர்வுகளையும் மேற்கொள்ளுகிறார்களா ஏன்ற கேள்வியும் இருக்கிறது? உலக வரலாற்றில் இப்படிததான் நடந்திருக்கிறது.

நீங்கள் குறிப்பட்டதுபோல தென்பகுதி சிங்கள மக்களுக்கு இது யுத்த வெற்றி தமிழ் மக்களுக்கு பெரும் சோகம். ஆனால் கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்ததது. இந்த யுத்தத்தை இரண்டு சாராரும் முன்னெடுத்தார்கள். இரண்டு தரப்பினதும் துப்பாக்கி ரவைகள் பேசிக்கொண்டிருந்தன. இறைச்சி வாயால் பேசுவதற்கு பதிலாக இருப்பு வாயால் பேசினார்கள். அதுக்கு ஈவஇரக்கம், மனிதாபிமானம், உணர்ச்சிகள், உணர்வுகள் இல்லை. யுத்தம் மிலேச்சத்தனமானது. யுத்தததின் முடிவுகளும் மிலேச்சத்தனமானவை. இதற்கு ஒருவரை இருவரை பொறுப்பு கூற முடியாது. இந்த யுத்ததிற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. வரலாற்றில் ஆடசி செய்த யுத்தத்தை நிர்மாணித்த அனைவரும் யுத்தக் குற்றவாளிகள்தான். தமிழரசியல்வாதிகள் அரசாங்கங்கள் சிங்கள அரசியலவாதிகள் அனைவரும் யுத்ததின் நிர்மாணக் கர்தாக்கள்.

மறுபுறத்தில் இந்தியா, அமரிக்கா, நோர்வே, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், அனைவரும் இதன் நிர்மாணக் கர்த்தாக்கள். அனைவரும் யுத்தக் குற்றவாளிக் கூண்டிலில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

03
தீபச்செல்வன்:

யுத்த களங்களில் நடந்த மீறல்களை வெளிப்படுத்துகின்ற புகபை;டபடங்கள் வெளிhகியுள்ளன. அண்மையில்கூட துவாரகா என்ற பெயரில் ஒரு பெண்ணின் சிதைக்கப்படட உடலின் படம் வெளியாகியிருந்து. அது புலிகளின் நிதர்சனம் பிரிவு மகளீர்போராளி இசைப்பிரியா. அவர் கடுமையான பாலியல் சித்திரவதை செயயப்பட்டு சித்திரவதையினாலே கொல்லப்பட்டிருக்கிறார். அதற்கு முன்பு சில போராளிகள் இராணுவ சீருடை அணிந்தவர்களினால் சுட்டுக்கொல்லப்படும் காட்சியும் வெளிவந்திருந்தது. இப்படியான புகைப்படங்களும் ஒளிக்காட்சிகளுடம் இதுவரை வெளிவராது தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிற சம்பவங்களும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிறது. இந்த நிகழ்வுகளை எப்படி பார்க்கிறிர்கள்?

இராமலிங்கம் சந்திரசேகரன்

நீங்கள் குறிப்பிட்ட அந்தப் புகைப்படங்களை ஒளிக்காட்சிகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். துவாரகா எனப்பட்ட அந்த சகோதரி, பாலச்சந்திரனின் உடல் அவற்றைப் பார்த்தேன். அதுபோல பல போரளிகளைச் சின்னாபின்னமாக்கியதை பெண்கள் மானபங்கப்படுத்தப்ப்பட்டதை நான் ஊடகங்கள் வாயிலாக பார்த்திருக்கிறேன். இது உண்மையில் வேதனையளிக்கின்ற விடயம். இந்த இளைஞர்கள் யுவதிகள் வேறு யாருமில்லை அவர்கள் எங்கள் சகோதரிகள்., சகோதரர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த சகோதரர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வுகளை ஏற்படுத்தாதன் விளைவாகவும் இது நடந்திருக்கிறது.

தோழரே! இப்படி இந்த யுத்தகளததில் மாத்திரமல்ல இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி ஒரு போராட்ட அமைப்பாக இருந்தபோது 10ஆயிரம் இளைஞர்களை படுகொலை செய்தார்கள். 20 ஆயிரம் இளைஞர் யுவதிகளை சிறையிலடைத்தார்கள். 1971 ஏப்பிலர் 16 ஆம் திகதி கதிர்காமப் பிரதேசத்தின் அழகியாக தெரிவு செய்யப்பட்ட மின்னம்பேரியை கொண்டு சென்று மானபங்ககப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக நடந்து வரப்பண்ணி சுட்டு உயிரோடு புதைத்த பாவிகளும் இந்த நாட்டில் இருக்கின்றார்கள். 1989ஆம் ஆணடு 60 ஆயிரம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். புலிகள் தங்களது போராளிகள் 20 ஆயிரம் பேர் இறந்ததாக குறிப்பிட்டார்கள். முக்கள் விடுதலை முன்னணி 60 ஆயிரத்திறகு அதிகமானவர்களை இழந்திருக்கிறது.

முள்ளுக்கம்பியால் கட்டி உயிரோடு ரயரில் போட்டு எறிக்கப்படடு, சித்திவரவதைக்கு உள்ளாக்கப்பட்டு ஆறுகளில் மிதக்கப்பட்ட வரலாறும் இருக்கிறது. பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மானபங்ககப்படுத்தப்பட்ட வரலாறும் இருக்கிறது. ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 1988ஆம் ஆண்டு எமது கட்சியின் சகோதரர் ஒருவரையும் சகோதரி ஒருவரையும் கடத்தியிருந்தார்கள். அன்று இரவு முழுவதும் அந்த சகோதரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு மறுநாள் அந்தச் சகோதரியின் மார்பகங்களை வெட்டி அந்த சகோதரியின் வாயில் திணித்து விட்டு அந்தத் சகோதரரின் ஆண்குறியை வெட்டி அந்த சகோதரியின் பெண்குறியில் திணித்து இரண்டு நாட்களாக கண்காட்சிக்கு வைத்திருந்தார்கள். அன்று சிங்கள இளைஞர்கள் யுவதிகளுக்கு அவ்வாறான அநீதிகளை இளைத்தவர்கள் பாதுகாப்புப் படையிலிருந்த காவாளிகள். அவ்வாறான காவாளித்தனமானவர்கள் தமிழ் பிரதேசங்களுக்கு செல்லும்பொழுது என்ன செய்திருப்பாhகள் என்று இந்த சம்பவங்களோடு உப்பிட்டு பார்க்கிறபோது புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி நிகழ்ந்ததை உறுதிப்படுத்த மேலும் மேலும் சான்றுகள் வெளியாகிக் கொண்டிருக்கினறன. அந்தக் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தண்டனையை அளி;க்க வேண்டும்.

இந்த படுகொலைகளுக்கு இலங்கை இராணுவம் மாத்திரம் காரணமல்ல. இராணுவத்தை இந்த நிலமைக்கு கொண்டு வந்ததிலிருந்து புலிகளை அந்த இடத்திற்கு தள்ளியதிலிருந்து இவற்றை வழி நடத்திய, யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற இந்தியா அமரிக்கா நோர்வே ஐ.நா அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும். இந்த மக்களின் அவலத்திற்கு காரணமான ஒவ்வொருவரும் கூண்டில் நிறுத்தி எங்களுக்கு நியாhம் பெற்றுத் தர வேண்டும்.

04
தீபச்செல்வன்:

சரத்பொன்சேகாவுடன் நீங்கள் இணைந்து நிற்கின்றீர்கள். உங்களுடன் மறுபறத்தி;ல் இணைந்து நிற்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியில் மக்களுக்கு நம்பகம் இல்லாத தன்மை இருக்கிறது. ரணில்விக்கிரமங்கவினுடைய தந்திரம் போன்றவற்றால் தமிழ் மக்களிடம் கசப்பானவராக இருக்கிறார். சரத்பொன்சேகாவை ஆதரிக்கிற உங்கள் நிலைப்பாடும் ஐக்கியசேதியக் கட்சியுடன் சேர்ந்து நிற்கின்ற நிலமையும் தவறான விளைவுகளைத் தந்தால் என்ன செய்ய முடியும்?

இராமலிங்கம் சந்திரசேகரன்

அப்படியான சந்தேகங்கள் எழுவதில் நியாம் இருக்கின்றது. ஆனால் அப்படியான நிகழ்வுகள் நிகழக்கூடாது என்பதே அனைவரருடைய விரும்பும். அவ்வாறான விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தன்னாளான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணி நம்புகின்றது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். சரத்பொன்சேகா அவர்களுக்கு குறுகிய வேலைத்திட்டம் ஒன்றை கொடுத்திரு;கிறோம். அவர் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டியிருக்கும். அதில் முன்மையானது. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பிறகு பாராள மன்றத்தை களைக்க வேண்டும். காபாந்து அரசாங்கம் கொண்டு வர வேண்டும். அந்தக் காபாந்து அரசாங்கத்தின் கீழ் பராளமன்றம் அமைச்சரவை கொண்டு வர வேண்டும். அடுத்து பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்த பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்கு சுயாதீன ஆனைக்குழுக்கள் நிறுவ வேண்டும். ஆதன் கீழ் நாட்டின் நியாhன தேர்தல் ஒன்றை கட்சி சாராத சரத்பொன்சேகா நடுநிலையாக நின்று செற்படுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இலங்கையில் முதன் முதலில் சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு வாய்யப்பிருக்கிறது.

கைது செய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கு அதிகமான இளைஞர்கள் இவர்களை விடுதலை செய்வதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகைள துரிதமாக முன்னெடுக்கப்படும். ஊடனடியாக சரத் பொன்சேகா ஆட்சி பீடமேறி அடுத் நிமிடமே கவளத்தில் கொள்ள வேண்டும். அதுபோல இடம்பெயர்ந்த மக்களின் மீள் வாழ்வுக்கு சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆவளை செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். அதற்கு அவர் இணக்கம் தெரிவித்திருக்கிறார். அதற்கான சாத்திளயங்கள் இருப்பதை திடமாக நாங்கள் நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே கோரிக்கைகளை முன்வைத்து சரத்பொன்சேகாவை ஆதரித்து நிற்கின்றோம்.

இது நாள் வரை ஒரு அரசியல் கட்சியின் தலைவரை ஆதரித்தோம். அவருக்கு பின்னுக்கு அரசில் இருந்தது. அரசியல் வாதிகள் இருந்தார்கள். அமைச்சார்கள் பாராளமனற உறுப்பினர்கள் இருந்தார்கள். சரத்பொன்சேகாவுக்கு அவ்வாறு கிடையாது. அவரு;கு என்று ஒரு கட்சி கிடையாது. புhராளமன்ற உறுப்பினர் கிடையாது. பாராளமன்றம் கிடையாது. இவர் முன் வைக்கின்ற கூற்றுக்களை நிறைவேற்றுவதற்கு பராளமன்றத்தில் ஒரு சூழல் அமையும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.

ஐக்கியதேசியக் கட்சியோடு நாங்கள் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை. நாங்கள் சரத்பொன்சேகாவோடுதான் கூட்டுச் சேர்ந்திருக்கிறோம். நீங்கள் கேட்கலாம் அப்டியென்றால் எப்படி ஒரே மேடையில் இருந்து பேசுகிறிர்கள் என்று. 2005 ஆம் ஆண்டுகூ;ட நாங்கள் மகிந்த ராஜபக்ஷவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டபோது ஹெல உறுமயக் கட்சியும் மக்கள் ஐக்கிய முன்னணியும் கமுனிஸ்ட் கட்சியும் உடன்படிக்கை செய்து கொண்டது. அப்பொழுதும் நாங்கள் மகிந்தராஜபக்ஷவோடு மட்டுமே உடன்படிக்கை செய்து கொண்டிருந்தோம். அதுபோல இன்று சரத்பொன்சேகாவோடு உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறோமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்படிக்கை செய்யவில்லை. சரத்பொன்சேகாவை வெல்ல வைப்பதற்காக அவர்களும் நாங்களும் இணைந்து ஆதரவளிக்கிறோம். வெல்ல வைப்பதற்கு மாத்திரமே அவர்களுடன் இணைந்து நிற்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சியோடு எந்தக் கூட்டு உடன்படிக்கையும் நாங்கள் செய்து கொள்ளவில்லை.

05
தீபச்செல்வன்:

யுத்த வெற்றியை அரசாங்கம் தன் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்துகிறது. அதேபோல தடுப்பு முகாமில் உள்ள மக்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிப்பதும் புகைப்படங்களை எடுத்து ஊடகங்களில் வெளியிடுவதும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மீள குடியமர்த்த கொண்டு செல்லுவதும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதும் அரசியல் நலன்களுக்காக முன்னெடுக்கபடுகிறது. இங்கு நேர்மையான விடுவிப்பு மீள்குடியேற்றம் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இது குறித்து என்ன கருதுகிறர்கள்?

இராமலிங்கம் சந்திரசேகரன்

வடபகுதி மக்ளுக்கு வசந்தம் பிறக்கவில்லை. ஆனால் வடக்கின் வசந்தத்தை முன்னெடுக்கும் அமைச்சர்களுக்கு வசந்தம் பிறந்திருக்கிறது. பசில்ராஜபக்ஷ அவர்களுக்கு வசந்தம் பிறந்திருக்கிது. ர்pஷாட்பதியுதின் அர்களுக்கு வசந்தம் பிறந்திருக்கிறது. இவர்கள் மக்களுக்கு வழங்கிய கொட்டில்களை களவாடியவர்கள். மக்களுக்கு வழங்கிய சோற்றுப்பர்hசலை களவாடியவர்கள். இப்படியான செப்படி வித்தைகளை கண்டு மக்கள் ஏமாறக்கூடாது. அவைகளுக்கு ஆக்கப+ர்வமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று சரத்பொன்சேகா அவர்கள் கண்டியில் வைத்து வழங்கிய உறுதியுரையில் மிகத்தெளிவாக மீள்குடியேற்றம் மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சந்பம்தமாக வாய்ப்பேச்சு அல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

இடமப்பெயர்ந்து வந்த மக்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறாhர்கள் என்று கடந்தகாலங்களில் பாராளுமன்றத்தில் நான்தான் முதன் முதலில் குறிப்பிட்டிருந்தேன். அப்படி குறிப்பிட்டதால் அரசசார்ப்பு ஊடகங்கள் யாவும் எங்களுக்கு எதிராக நின்று, புலிகளுக்கு ஆதரவாக பேசிவிடடேன் என்று பிரசாரம் செய்தன. அன்றிலிருந்து இன்று வரை மிகத் தெளிவாக இருக்கிறோம். சிறைச்சாலையில் உள்ள தமழிர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று. இன்று குடியேற்றம் நடப்பதாக கூறுகிறார்கள். அதுவும்கூட இன்னுமொரு சிறைச்சாலையாகத்தான் இருக்கின்றன. இதுநாள் வரை அவர்களுக்கு எந்த மானியங்களும் வழங்க்கப்படவில்லை. அவர்களது வாழ்க்கையை மீள கட்டியெழுப்படாது அவர்களது பிள்ளைகள வாழவை மீள கட்டியெழுப்படாது இருக்கின்ற நிலையில் இந்த மக்களது வாழ்க்கையில் எப்படி வசந்தம் பிறக்க முடியும்?

இந்த மூன்று லட்சம் மக்கள் மத்தியில் நாங்கள் தேடிப் பார்க்கின்ற பொழுது சுமார் 8 ஆயிரத்திற்கு அதிகமான பிள்ளைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இன்று உடல் ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான முதியவர்கள் யாருமற்ற அனாதரவான நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கபிறார்கள். கிழக்கில் 49 ஆயிரத்திற்கு அதிகமான பெண்கள் விதவைகள் ஆக்கப்ட்டிருக்கிறார்கள். இது இலகுவான விடயமல்ல. இது சவால் மிக்க நேரம். இதை தனினொரு நபரால் சாதிக்க முடியாது. முழு நாடும் முழு நாட்டின் பலத்தையும் இதற்காக பிரயோகிக்க வேண்டும் என்று 2009ஆம் ஆண்டு மே 24ஆம் திகதி ஒரு அறிக்கை ஒன்றை அரசாங்கத்திற்கு சமர்பித்திருந்தோம். இந்த விடயத்தில் அரசாங்கம் சரியான கவனத்தில் எடுக்காது இதில் தனது இருப்பை தனது அரசிலை இருபபை செலுத்தி இந்த மக்களை அரசியல் பகடைக்காய்களாக்குவது எப்படி என்கின்றதை பார்த்தாhகளே தவிர இந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏறபடுத்தி வில்லை என்பது எங்கள் கருத்து.

06
தீபச்செல்வன்:

ஜே.வி.பி அமைப்பு ஆரம்பகாலத்தில் சோசலீச இடதுசாரிச் சிந்தனை கொண்ட அமைப்பாக இருந்திருக்கிறது. அரசாங்கத்தை எதிர்பதில் நீங்கள் புலிகளின் பக்கம் இருந்தாலும் புலிகளுக்கு எதிராகவே கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கிறர்கள். உங்களுககுக மக்கள் ஆதரவு இருப்பதுபோல புலிகளுக்கு மக்கள் வழங்கிய பெரிய ஆதரவினாலேயே அவர்களால் பெரியதொரு அமைப்பாக வளர்த்திருக்க முடிந்தது. எப்படியிருந்தாலும் உங்களுடைய ஆயுதப் போரட்ட அமைப்பிற்கு நிகழ்ந்த மாதிரியே விடுதலைப்புலிகளுக்கும் இறுதிக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஜனநாயக மனிதாபிமானமற்ற வகையில் மிலேச்சத்தனமாகவும் கோரத்தனமாகவும் மிருகத்தனமாகவும் சிதைத்து மக்களுக்கும் கடுமையன அழிவையும் சேகத்தையும் வழங்கியிக்கிறது உங்களால் இந்த சிதைப்பை எப்படி பார்க்க முடிகிறது.?

இராமலிங்கம் சந்திரசேகரன்:

ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக ரீதியான பேராட்டங்களை மிலேச்சத்தனமாக அடக்கி தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ளுவது முதலாளித்துவத்தின் பண்பு. அதுபோலவேதான் புலிகள் அமைப்பு படு மிலேச்சனமாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்ட்டிருக்கிறது. அவர்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அழிப்புக்கு அரசாங்கம் மாத்திரமல்ல காரணம். புலிகள் அமைப்பு என்பது சர்வதேச ரீதியில் பலம் வாய்த அமைப்பாக அஇருநதது. ஆப்படி சர்வதேச ரீதியாக பலம் வாய்ந்த அமைப்புக்கு இவ்வாறான அழிவிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகைள அலலது அரசியல் தந்திரோபாயங்களை கையாள முடியாது போனது ஏன் என்ற கேள்வி எங்களுக்கு இருக்கின்றது.

இந்தக் காரணம் ஒரு புறமாகவும் அரச படைகளின் ஆதிக்கம் மறுபுறத்திலும் இருக்கிறது. அரச படைகளின் தந்திரபாயமான நகர்வுகளினால் இவர்கள் அழிவுகளை சந்தித்தார்கள் என்று காணுகிறோம். இரண்டு பக்கமும் துப்பாக்கிகள் பேசிக்கொண்டிருந்தன. அப்பொழுது பலம் வாய்ந்த துப்பாக்கி வெற்றி பெற்றிருக்கிறது. நான் முதலில் குறி;பபடுடதது போல துப்பாக்கிள் ஈவஇர்கமற்ற முறையில் நடந்து கொண்டது. எங்களுக்கு 1989ஆம் ஆண்டு நடந்து கொண்டதுபோல அதே நிகழ்வு நிலமை இன்று புலிகளுக்கு; நிகழ்ந்திருக்கிறது. நாங்கள் இடதுசாரி அமைப்பு என்றும் விடுதலைப் புலிகள் விடுதலைப் போரட்ட அமைப்பு என்றும் குறிப்பிட்டிருந்திர்கள். மக்கள் விடுதலை முன்னணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. 1971ஆம் ஆண்டிலும் சரி 1989 ஆம் ஆண்டிலும் சரி மக்கள் விடுதலை முன்னணி சிஙகள இலங்கை;காக போராடவில்லை.

ஆனால் விடுதலைப் பலிகள் தங்கள் தாரக மந்திரமாக சொல்லிக்கொண்டிருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் ‘தாகம் தமீழ்ழ தாயகம்’ என்கின்ற கோட்பாடு. இந்த நாட்டை பிரிக்கின்றதை நாங்கள் எதிர்கின்றோம். ஒரு நாட்டைப் பிரிப்பது என்பது அந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்கு சமனானது. தொழிலாளர் வர்கத்திற்குரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரி சந்தர்பங்கள் இல்லாமல் போகலாம். அத்தோடு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தாயகம் என்று குறிப்பிடுகின்ற பொழுது மறுபுறத்தில ;நாங்கள் தென்பகுதியில் வாழுகின்றோம். வடகிழக்கில் மாத்திரமல்ல தமிழர்கள் வாழுகின்றார்கள். இந்த நாடு முழுவதும் வாழுகிறார்கள். வடக்கிழக்கு தமிழ் மக்களுக்கு தயாகம் என்கின்றபோது வடகிழக்கு தவிhந்த இடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு எது தாயகம் என்கின்ற கேள்வி எழுகின்றது.

ஒரு பக்த்தில் தாய் நாடு இருக்கின்ற தமிழர்களும் இன்னொரு புறத்தி; தாய்நாடு இல்லாத தமிழர்கள் இன்னொரு புறத்தில் இருக்கின்றார்கள். இன்று இலங்கையில் 74 சதீத மக்கள் தமிழ் சிங்கள மக்களே வாழுகிறார்கள். கொழும்பு நகரத்தில் இருக்கின்ற வியாhபார நிலையங்கள் அனைத்தும் தமிழ் வியாபாரிகள் கையிலதான் இருக்கின்றன. அப்படி தனி நாடு ஒன்று ஏற்படுகின்றபோது சிஙகள இனவாதிகள் சொல்லுவார்கள் உங்களுக்கு தனிநாடு இருக்கிறது. எங்களையும் முஸ்லீம்களையும் விரட்டியடித்திருக்கிறார்கள். உங்கள் ஈழத்திற்கு போங்கள் என்று சொல்லுவார்கள். கர்நாடகாவில் காவிரி கங்கை கூடுகின்றது. பக்கத்தில் தமிழ் நாடும் ஆந்திராவும் இருக்கின்றது. இந்த தேசத்தை திராவிட தேசம் என்றார்கள். முன்பு திராவிட தேசம் ஒன்று சேருங்கள் என்று போராடியவர்கள் இன்று காவிரியில் ஓடுகின்ற தண்ணீரைக் குடுப்பதற்கு மறுக்கிறார்கள்.

அப்படியான சந்தர்பத்தில் நாளை இங்கொரு ஈழம் உருவாக்கப்படுகின்ற பொழுது நாளை அங்கு சிங்கள இராச்சயிம் உருவாகும். இங்கு ஈழ ராஜ்சியம் உருவாகும். ஈழப்படைகள் தமது எல்லைப் பிரசேதத்தை காப்பதற்கான நடவடிகெ;கைளை எடுப்பார்கள். அந்த எல்லையை வவுனியாவல் போடுவதா? முதவாச்சியில் போடுவதா? அநுராதபுரத்தில் போடுவதா? ஏன்ற பிரச்சினைகள் உருவாகும். மறுபறுத்தில் சிஙகளப் படைகள் தங்கள் எல்லைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும். அதனால் சதா காலமும் யுத்தம் இந்த நாட்டில் நடைபெறும். அப்படியான வேளையில் அமரிக்கா இந்தியா நோர்வே தங்கள் ஆயுளுதங்களை இரண்டு சாராருக்கும் கொடுத்து நன்றாக யுத்தத்தை தொடருங்கள் என்று எங்கள் வளங்களை சூறையாடும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

அப்டியான சந்தர்பத்தில் இந்த நாட்டில் ஒரு வர்க்கப்போரட்டத்தைப் பற்றியோ சோசலிச சமூதாயத்தின் விடுதலை பற்றியோ இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் இன ஒற்றுமை பற்றியோ சிந்தித்துக்கூட பார்க்க முடியாத நிலை ஒன்று ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

தனிப்பட்ட ரீதியாக அவர்களின் தியாகங்கள் அர்பணிப்புகளுக்கு தலை வணங்குகிறோம். பிரபாகரன் இறுதி இந்த வன்னி நிலப்பரப்பிலிரந்து உயிர் நீத்திருக்கிறார்கள். அதற்காக தலை வணங்குகின்றோம். உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக இருந்தவர்கள் ஏன் இப்படிப்பட்ட அழிவுகளைச் சந்தித்தார்கள் என்ற கேள்வியிருக்கிறது. ஆனால் பிரிவினை பற்றி முன்னெடுத்த கொள்ளையை அடிப்படையிலேதான் மக்கள் விடுதலை முன்னணி விடுதலைப் புலிகளை எதிர்த்திருந்தது;. இன்று அவர்களுக்கு அவலங்கள் அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்று அதற்கு மாற்றமாக அரசியல் நிலை ஒன்றுக்கு தமிழ் மக்கள் செல்ல வேண்டியுள்ளது.

07
தீபச்செல்வன்:

நீண்ட காலத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களது இந்தப் பயணம் மக்கள் எப்படி இங்கு வாழ்கிறார்கள் என்பதை உஙகளுக்கு தரிசனமாக காண்பித்திருக்கும். தெற்கில் உள்ள நிலவரங்களுடன் இங்கத்தைய நிலவரங்கள் எந்தளவு வேறுபடுகின்றன?

இராமலிங்கம் சந்திரசேகரன்:

தென்னிலங்கையில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு சில ஊடகங்கள் யாழ்பாணத்து மக்களைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தவை அனைத்தும் பொய் என்பதை நேரடியாக பார்க்கும் பொழுது நிருபணமாகிறது. பல கிராமங்களுக்கு சென்று பார்த்தேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் தொழில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

30 வருட யுத்தத்தால் ஒவ்வவொரு குடும்பத்திலும் யாரோ ஒருவர் ஏதோ ஒரு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார். கடந்த வன்னி இறுதி யுத்த்தில் பாதிக்கப்ப்டட குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் அனைவரும் வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற மக்களது வாழ்க்கையில் பல்வேறு சிதைவுகள் பல்வேறு இடிபாடுகள் ஏற்பட்டுள்ளன. அந்த சிதைவுகளையும் இடிபாடுகளையும் நிவர்த்தி செய்து தமிழர்களுக்கே உரிய பன்பாட்டைக் கொண்ட யாழ்ப்பாணத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். அண்மையில் இந்தியாவிலுள்ள கவிஞர் ஜெயபாலனுடன் உரையாடி பொழுது அவரிடம் ஒரேயொரு வாhத்தை கேட்டேன். ஐய்யா ஜெயபாலன் அவர்களே எங்களுக்கு பழைய ஜெயபாலன் வேண்டும். பழைய ஜெயபாலனின் கவிதைகள் முழு நாட்டுக்கும் உரியது. அவரது இலக்கியத் தடங்களை நான் தேடிப் பார்கின்ற பொழுது ஒடுக்கப்படுகின்ற மக்களின் பால் மேலோஙகி; நிற்கிறது. கடந்காலத்தில் பல கல்விமான்கள் அனைவரையும் உருவாக்கிய மண். அவைகளுக்கு இன்று சிதைவுகள் இடிபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த சிதைவுகளை இடிபாடுகளை நிவர்hத்தி செய்து கொண்டு பழைய யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்ப வேண்டிய தேவையிருக்கிறது. இவ்வாறான நிலையிலும் தமிழர்களுக்குரிய பாரம்பரியத்தை பண்பாட்டை கட்டிக் காக்கின்றவர்கள் இன்னும் துடிப்போடு இருக்கின்றார்கள் என்பதை இங்கு பார்த்தேன். எதிர் வரும் காலத்தில் இவை அனைத்திற்கும் இந்த மக்கள் பதில் சொல்லுவர்hகள்.
08
தீபச்செல்வன்:

வடக்கு கிழக்கில் வலிந்த சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறலாம் என்ற ஐய்யம் மக்கிளிடம் இருக்கிறது. பூர்வீகமாக மக்கள் வாழுகின்ற நிலத்திலிருந்து அவர்களை பிடுங்குவது அல்லது அந்த நிலத்தை பறிப்பது மிகுந்த நியாமற்றது. இந்த ஐய்யத்தை நீங்கள் எப்படி பார்க்கறிர்கள்?

இராமலிங்கம் சந்திரசேகரன்:

வலிந்த குடியேற்றம் என்பது நீண்ட காலமாக இந்தப் பகுதியில் இருக்கின்ற பிரச்சினை. ஓரு மக்கள் ஒரு பிரதேசத்தில் வாழுகின்ற போது அவர்களது பிறப்பை கேள்விக்குறியாக்கிவிட்டு அந்தப் பிரதேசங்களில் அவர்களது பாரம்பரியத்திறகு உட்பட்ட nhபருட்கள் அனைத்தையும் செயலற செய்து விட்டு இன்னொரு மக்கள் கூட்டத்தை குடியேற்றம்ம செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இதை மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் திடமாக குறிப்பிடுகின்றோம்.

இந்த வலிந்த குடியேற்றங்கள் திருகோணமலை மாவட்டத்திலேயே கூடுதலாக நடைபெற்றிருக்கின்றது. அண்மையில் நான் அங்கு சென்று பாhத்தேன். அங்கு சிங்கள மக்களை குடியேற்றவதைவிட பல்லாயிரக்கணக்கான வியாhபாரிகளுக்கு நிலங்கள் தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளன. அதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு பிரதேசத்தை அழிப்பதற்கு ஒரு மக்கள் கூட்டத்தை அழிப்பதற்கு அல்லது அந்த மக்களை சிறுபான்யைமாக சிதைப்பதை நோக்கமாக கொண்டு குடியேற்றங்கள் நடைபெற்றிருந்தால் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நன்றி: உன்னதம் ஜனவரி 2010

0 comments:

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்