Monday, December 7, 2009

“தற்போதைய தமிழ் ஆய்வின் போக்கு மனித சமூகத்திற்கு பயன்படக்கூடிய விதித்தில் நடைபெறவில்லை” - கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்



தமிழ் பன்னபாட்டையும் மரபையும் நேசிக்கிற பெண்ணாக என்றைக்கும் எங்கும் வாழ் விரும்புகிறவர் கலாநிதி மனோண்மணி சண்முகதாஸ். ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வருகை விரிவுரையாளராக கடமையாற்றியவர். தமிழ் பழைய இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியஙகள் வரை தனது ஆய்வுப் பார்வையைச் செலுத்தி வருகிற இவர் பிறமொழி இலக்கியங்களையும் ஆராயந்;து வருபவர். உலகப்பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இலக்கிய ஆரர்ச்சிகளில் ஈடுபட்டதுடன் யபப்பான் ஹச்சுயின் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்திருக்கிறார். தற்போதைய தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டிற்கான தமிழாய்வுகள் இடப்பெறவில்லை எனவும் அற்கான கல்வியளார்கள் நம்மிடம் இல்லை எனவும் கூறுகிற இவருடன் படிகள் இதழுக்காக நேர்காணல் ஒன்றை நிகழத்தியிருந்தேன்.

நேர்காணல் மற்றும் புகைப்படம் :தீபச்செல்வன்

01.பல்கலைக்கழகங்களில் கூடுதலாக பெண்கள் தெரிவு செய்யப்பட்டு கற்கைகளில் ஈடுபடுகிறபோதும் விரிவுரையாளராக அதிகம் ஆண்களே வருகின்றனர். அப்படியிருக்கையில் நீங்கள் ஒரு வருகை விரிவுரையாளராக எப்படி வெளிவர முடிந்தது?

என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தமிழ்மொழி இலக்கியம் பற்றிய தகுதிப்பாடு யப்பானிலும் யாழ்ப்பாணத்திலும் என்னை வருகை வரிவுரையாளராக்கியது. குறிப்பாக பெண்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்களில் போதியளவு வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை.

02.உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். அந்த அனுபவம் எப்படியிருக்கிறது? தமிழ் இலக்கியங்கள் பற்றி அந்த நாடுகளின் கருத்து என்னவாக அமைந்திருக்கிறது?

உலகபல்கலைக்கழகங்கள் என்ற வகையில் யப்பான், இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகமாக தமிழ் ஆராய்ச்சிகளில் தொடர்பு கொண்டு வந்திருக்கிறேன் அவ்வாறு தொடர்பு கொண்டபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்னுடைய ஆய்வுப்பரப்பை விரிவுபடுத்தவும், தொலைநோக்கோடு செயற்படுத்தவும் என்னைத் தூண்டின. தமிழ் இலக்கியங்கள் பற்றிய அந்நாடுகள் கொண்டிருந்த சிறப்பான நோக்கு நன்கு புலப்பட்டது. பல கருத்தரங்குகளிலும், ஆய்வரங்குகளிலும், சர்வதேச மாநாடுகளிலும் அதனை கண்கூடாக காணமுடிந்தது.

03.நீங்களும் உங்கள் துணைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் யப்பானிய பேராசிரியர் சுசுமு ஓனோவுடன் சேர்ந்து யப்பானிய தமிழ் உறவு என்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படியிருக்கிறது?

இந்த ‘யப்பானிய தமிழ் உறவு’ பற்றிய ஆய்வு 1983 ம் ஆண்டிலிருந்து 2003 ம் ஆண்டு வரை ஏறக்குறைய 20 ஆண்டுகள் தொடர்ச்;சியாக செய்திருந்தேன். அதிலும் சிறப்பாக முன் பத்து ஆண்டுகள் யப்பானில் தங்கியிருந்து ஆய்வுகளை செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் அங்கு பல்கலைக்கழகங்களில் யப்பானிய மொழியில் யப்பானிய மாணவர்களுக்கு விரிவுரையாற்றும் வாய்ப்பை பெற்றிருந்தேன். குறிப்பாக இந்த ஆய்வு எனது யப்பானிய மொழிப்புலமையை பெற்றுக்கொள்ள காரணமாக இருந்தது. யப்பானிய பண்டைய இலக்கிய புலமையாளரான பேராசிரியர் சுசுமோவுடன் 20 ஆண்டுகள் செய்த ஆண்டுகள் என்னை சர்வதேச ஆய்வரங்கில் நிறுதியுள்ளது. இதற்கு எனது துணைவர் போராசிரியர் அ.சண்முகதாஸ் பக்கபலமாக இருந்தார்.

04.சங்ககால இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகில் அதிகம் அக்கறை காட்டி வருகிறீர்கள். அதன் சிறப்பை எப்படிக் கருதுகிறீர்கள்?

சங்க இலக்கியங்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட முக்கிய காரணம்; பேராசிரியர் கா.கைலாசபதியே எனக்கு முதலில் சங்க இல்கியத்தை கற்பித்தவர் அவர் அதில் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய ஆற்றுப்படுத்தலையும் செய்திருந்தார். யப்பானிய தமிழ் உறவு பற்றிய ஆய்வில் சங்க இலக்கியங்களை சான்றாக பயன்படுத்தி போது அதன் மேல் இருந்த அக்கறை மேலும் கூடியது. காலத்தால் பழமையான சங்க இலக்கிங்கள் நவீன இலக்கியங்களின் முதல் ஊற்றாக விளங்கியதென நான் கருதுகிறேன்.


05.உங்கள் ஆய்வு ஈடுபாடுகளுக்கு துணைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸின் ஒத்துழைப்புக்கள் எப்படியிருக்கிறது?

என்னுடைய ஆய்வுகளுக்கு எனது கணவர் தன்னாலான பங்களிப்புக்களை செய்துள்ளார.; எனது யப்பானிய தமிழ் உறவு ஆய்விற்காக யப்பானில் தங்கி நிற்க தீர்மானித்த போது அதற்கும் எனது கணவர் பக்க பலமாக இருந்தார்.

08.யாழ்ப்பாணத்தில் பெண்களது சுதந்திரம் அல்லது அவர்களது உலகம் எப்படியிருக்கிறது?

பெண்களது சுதந்திரம் 1960 களின் பின்னர் விழிப்பு நிலைக்கு ஆளாகியது. தாய் மொழிமூலம் பல்கலைக்கழக கல்வி எனும் சூழ்நிலை உருவாகிபோது பெண்களின் சுதந்திரம் விழிப்பு நிலை அடைந்தது. கலவியின் மூலம் தம்முடைய மரபான கட்டுப்பாடுகளை தளர்த்தி;க்கொள்ளலாம் என நினைத்தார். அதனால் வீடே உலகம் என இருந்த அவர்களது நிலை மாறி வெளி உலகத்திலும் தங்களை இணைத்துகொள்ள முயன்றனர்.

09.உலகத்தில் பல்வேறு சமூகங்களுடன் ஒப்பிடுகின்ற போது யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்கை மற்றும் வெளிகள் எவ்வாறிருக்கின்றன?

யாழ்ப்பாணப் பெண்களின் வாழ்க்கை அடிமனதில் ஒரு ஆழமான நம்பிக்கையோடு காத்திருக்கிறது. அதனால் மரபுகளை மீறவேண்டும் என்று நினைத்தாலும் மீற விரும்பாமல் அதற்கான காலத்திற்காக காத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துப் பெண் ஆணுக்கு சமமான கல்வியைப் பெற வேண்டும் என கடினமான உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

10.யாழ்ப்பாணத்தில் உங்கள் வாழ்க்கைச் சூழல் வெளிப்படையான கருத்துநிலை அதற்கான வெளிகள் எப்படியிருக்கின்றன?

நான் ஒரு கிராமிய வாழ்க்கையில் வளர்ந்து உருவாகியதால் தொடர்ந்து அந்த வாழ்க்கை வாழவிரும்புகிறேன். யாழப்;பாணத்தில் எனது வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கின்றது. என்னுடைய செயற்பாடுகளையும், தொண்டுகளையும் செய்வதற்கு ஏற்றதாக இருக்கின்றது.

11.ஆண்டாள் காதல் பாடல்களில் மீறல்களை நிகழ்த்தியுள்ளார்? இந்த தொடக்கத்தை பிற்கால இலக்கியங்கள் பின்பற்றியுள்ளன. ஆண்டாளின் துணிச்சலான கவிதைகள் பற்றி குறிப்பிடுங்கள்?

ஆண்டாளின் உணர்வு வித்தியாசமானது சங்க இலக்கிங்களில் கூறப்பட்ட அகபொருள் மரபுகளை புதியதொரு நெநெறியிலே ஆண்டாள் அனுபவித்துள்ளாள். ஆத்மீகமாக கண்ணனை அடைதல் எனும் புதிய நெறி அந்நெறியில் நின்று உணர்வுகளின் ஊடாக தன் அனுபவங்களை தான் விரும்பியவற்றை வெளிப்படுத்தி அதன் நிறைவையும் முடிவுசெய்கிறாள். மரபு வாழ்க்கை ஒன்றை புதிய நெறியில் காட்டியுள்ளாள். அதுவே பக்தி நெறியெனப்படுகிறது.

12.காரைக்காலம்மையாரின் கவிதைகள் எத்தகைய அனுபவத்தை உங்களுக்கு புலப்படுத்துகிறது?

காரைக்கால் அம்மையருடைய கவிதைகள் குடும்ப கட்டமைப்பை மாற்ற நினைக்கின்ற ஆணுடைய பலவீனத்திற்கு ஒரு சமூக அங்கீகாரம் வழங்குவதாக இருக்கின்றது. சங்க இலக்கித்தில் இயற்கையை பாடுகிற மரபை பக்தி என்கிற புதிய உணர்வு நிலைக்கு ஊடாக வெளிப்படுத்தியதுடன் அதனால் வாழ்வில் ஒரு சமநிலையைப் பேண வழிகாட்டுகிறது.

13.ஒளவையார் பற்றிய செய்திகள் குறித்து கூறுங்கள்?

சங்ககாலம் தொடக்கம் விஜயநகர நாயக்கர் காலம் வரைக்கும் பல பெண்பால் புலவர்கள் ஓளவையார் என்ற பெயரில இருந்தமைக்கு பல செய்யுள்கள் சான்றாக இருக்கின்றது. காலத்தின் தேவைக்கேற்ப செய்யுள்களில் கவிதை மரபும் பொருள்மரபும் மாற்றம் பெற்றுள்ளன. எனினும் சமூகத்தை வெளிப்படுத்தும் ஒரு தொலை நோக்கு எல்லோரிடமும் இருந்தை காணமுடிகிறது.

14.பாலியல் ரீதியான தமது எதிர்பார்ப்புக்களையும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் அதன் மீதிருக்கின்ற நெருக்கத்தையும் முரண்பாடுகளையும் தற்காலத்தில் ரஞ்சினி, மாதுமை போன்றோர் துணிச்சலாக எழுதி வருகின்றனர். தமிழில் இவ்வாறான கவிதைகளின் வருகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இக் கவிதைகள் பற்றிக் கூறுவதாக இருந்தால் பழைய சங்க இலக்கியங்களில் நயத்தக்க நாகரிகத்தோடு பேசப்பட்ட விடயங்கள் தற்போது வெளிப்படையாக கூறப்படுகின்றன. காலத்துக்கேற்ற வகையில் கவிதையின் புலப்பாடு மாறியுள்ளது.

15.போர் தமிழ் மக்களின் கனவுகளையும் இயல்பான வாழ்வையும் தின்றுவிட்டது. போரின் நேரடித்தாக்கம் இருக்கின்றதா?

போர் என்பது சங்ககாலத்தில் இருந்து தமிழ் மக்களின் வாழ்வில் தொடர்புபட்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் அதற்கு முகம்கொடுத்து வந்துள்ளார்கள்.

16.ஈழத்தின் போர் இலக்கியங்கள் எத்தகைய வரலாற்று அனுபவங்களை சேகரித்து வைத்திருக்கிறது? அதன் கனதி பற்றி உங்கள் கருத்து என்னவாகவிருக்கிறது?

ஒரு மனிதனுடைய சொந்த அநுபவங்களின் உடனடிப் பதிவாக அமைந்திருக்கின்றது. ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த இலக்கியங்களுக்கு கணிசமான இடம் ஒதுக்கப்படும்.

17.பெண்களது உரிமைகள் உலகம் வெளிகள் பற்றி பொதுவாக என்ன நினைக்கிறீர்கள்? வௌ;வேறு விதமான குரல்கள் எதிர்பார்ப்புக்கள் பெண் எழுத்துக்களில் வெளிப்படுகிறது போல இருக்கிறதல்லவா?

என்னைப் பொறுத்த வரை பெண்களது உரிமைகள் பற்றிய தெளிவான சிந்தனை எங்களிடம் இல்லை. மேலைத்தேசத்து குரல்களை கேட்டு மறு குரல்கள் கொடுக்கும் எழுத்துக்கள்தான் இப்போது தோன்றியுள்ளன.

18.உங்களின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்குச் செலுத்திய பேராசிரியர்களின் நினைவுகள் எப்படியிருக்கின்றன?

பசுமையாக இருக்கின்றன.

19.தமிழ்ச் சமுகத்தின் கருத்துநிலை எதிர் பார்ப்பு தொடர்பாக என்ன கருதுகிறீர்களா? இதற்காக கனதியான வெளிப்பாட்டை முன் வைக்கக்கூடிய கல்வி மான்கள் கருத்தியலாளர்கள் நம்மிடம் தற்போது இருக்கிறார்களா?;

அதை தெளிவாக சொல்லுகிறேன் தற்போது தமிழ்ச்சமூகத்தில் தொலைநோக்கு கொண்ட கல்விமான்களை என்னால் காணமுடியவில்லை.

20.மலையகப் பெண்கவிஞர்களது கவிதைகள் தொடர்பாக வாசிப்பு ஒன்றைச் செய்திருக்கிறீர்கள். ஈழத்துக் கவிதைகளில் மலையகப் பெண் கவிஞர்களது கவிதைகள் எத்தகைய இடத்தை வகிக்கின்றன?

சுருக்கமாகச் சொன்னால் தொல்காப்பியருடைய ஐந்திiணைகளில் ஒன்றான குறிஞ்சி திணையை களமாகக் கொண்ட கவிதைகள் என சொல்லலாம். மலையகப் பெண்கள் இப்போது தங்கள் குரல்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பது ஈழத்து கவிதைப்பரப்புக்கு ஒரு செழுமை கூடுவதாக அமைகிறது.

21.காலனிய பாதிப்பை உடைய மாணவர்கள் தமிழ்பாடத்தை கற்பதை கௌரவ குறைவாக கருதுகின்றனர் போல இருக்கிறது. இந்த மனநிலை எப்படி எமது சமூகத்தை பாதிக்கும் என நினைகிறீர்கள்?

காலணிய பாதிப்புடைய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தின் ஆற்றலை அறிந்துகொள்ளாத நிலையில், சமூகப்பயன்பாட்டை உணர்ந்து கொள்ளாத நிலையில் தமிழ் பாடத்தை கௌரவக் குறைவாக கருதுவது முட்டாள்த்தனமானது. இவர்களது இந்த முட்டாள்தனம் மனித விழுமியங்களை அறியாத சமூகத்தை உருவாக்குமென நான் கருதுகிறேன்.


22.தமிழ் பாடத்தை பிரத்தியோக வகுப்புகளில் கற்பிப்பவர்கள் வியாபாரத்தனமாக பரீட்சை நோக்கில் கற்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்த செயற்பாடு என்ன நிலைக்கு கொண்டு செல்லுகிறது?

அண்மைக்காலத்தில் பிரத்தியேக வகுப்புபென்பது வணிகச் செய்பாடாக மாற்றமடைந்ததன் காரணமாக தமிழ்ப் பாடங்களை கற்பிக்கும் சிலரும் ஏனைய பாடங்களை கற்பிக்கும் சிலரும் எதிர்காலத்து தமிழ் மாணவர்களின் கல்வி வளத்தை முளையிலே கிள்ளுகிறார்கள்.

23.தமிழ் கற்பிப்தில் நீங்கள் என்ன அடைவை கண்டிருக்கிறீர்ள்? தமிழை கற்பிப்பதில் நிங்கள் என்ன பிரச்சினைகளை எதிர் கொள்ளுறீர்கள்?

என்னைப் பொறுத்த வரையில் தமிழ் கற்பிப்பதில் எந்தப் பிரச்சனையையும் நான் எதிர்கொள்ளவில்லை. மாணவர்களின் நிலை, தகுதி, ஆர்வம் என்பவற்றை உணர்ந்து என்னுடைய கற்பித்தலை நான் முன்னெடுக்கிறேன். என்னுடைய மாணவர்கள் தமக்கான இலக்கை அடைகிறார்கள்.

24.தமிழாய்வின் போக்கு தற்போது எப்படியிருக்கிறது? தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்கு அவை எந்தளவில் பயனளிக்கின்றன?

தற்போதைய தமிழ் ஆய்வின் போக்கு மனித சமூகத்திற்கு பயன்படக்கூடிய விதித்தில் நடைபெறவில்லை என்பதே எனது கருத்து. இந்நிலைவ தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டை தடுத்து நிறுத்துகின்றது என்பதில் ஐயமில்லை.

25.நிறைவாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

படிகள் இதழுடாக என்னுடைய கருத்துக்களை தமிழ் வாசகர்களுக்கு எடுத்துரைப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.

நன்றி: படிகள்

5 comments:

deep said...

தீபன்,
மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்மணியின் முழு ஆளுமையை கொண்டரும் வரையில் இந்தப் பேட்டி அமையவில்லையென்றே படுகிறது. மேலோட்டமான பதில்களே தரப்பட்டபோல உணர்வு. பதில்களை இன்னமும்விரிவாக எதிர்பார்த்தேன்.

இது நேரடியாய்ப் பேசி பதிவு செய்யப்பட்ட பேட்டியா அல்லது எழுத்து மூலம் பெறப்பட்டதா?
எனினும் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Theepachelvan said...

வணக்கம் தீபா,

இந்த நேர்காணல் நேரடியாகவே பதிவு செய்யப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேர்காணல் செய்திருந்தேன். அவரின் ஆளுமையையும் இடத்தையும் பதவு செய்ய வேண்டும் என்ற எனது ஆவல் ஏமாற்றத்தையே பெற்றிருந்தது.

அவரிடம் பல இடங்களில் விரிவான பதிலுக்காக பேசிய பொழுதும் அவர் தன் பதில்களில் இப்படியே உறுதியாக இருந்தார். ஏன் இப்படி பேசுகிறார் என்பதற்காகவே இந்த நேர்காணலை வெளியிட்டிருக்கிறேன். இது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

துர்க்கா-தீபன் said...

பல இடங்களில் பதிலை விட கேள்வி விரிவாக உள்ளது. இந்தப் பேட்டிமுழுவதிலும் ஒரு நிராகரிப்பின் தொனி இழையோடுவதை எந்த ஒருவனும் உணர்வான். இது எதனால் என்றும் யாழ் பல்கலை சூழலை தெரிந்த ஒருவனால் அனுமானிக்க முடிவதும் வியப்பில்லை. இதை விட நீயார் இதை எல்லாம் கேட்க என்று ஒரு வரியில் பதிலளித்திருக்கலாம் - முடிந்தது பேட்டி! எங்கள் கல்வியாளர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருப்பதுதான் சமூகத்தின் சாபம் வேறொன்றும் இல்லை. தூர நோக்கு இல்லாத கல்விமான்களை குறித்து பேசும் இவர்கள் சமூக நோக்குடன் இயங்கும் மாணவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதும் முக்கியமானது. இன்னும் எங்கள் பேராசிரியர்கள் திறப்பதற்கு நிறையச் சாளரங்கள் இருக்கிறது. இலங்கையின் ஆகத் தரம் குறைந்த prof - student professional relationship இருப்பது எமது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தான் இதற்கு எந்த பீடமும் விதிவிலக்கல்ல. யாழ்ப்பாணத்து சமூகத்தின் மொத்தக் குணங்களின் ஒரு institutional reflector தான் jaffna university , இவைகள் மெல்லதிருந்தும் ஒருகாலம் சமூக மீட்சி தானாய் நிகழும்.

Theepachelvan said...

அன்பின் துர்கா-தீபன்

உங்களது கருத்தையே நான் இங்கு எதிர்பார்த்திருந்தேன். நான் யாழ்ப்பாணப் பல்கலைக்ழகத்தில் தமிழ்த்துறையில் படித்துக்கொண்டிருக்கிறேன். எங்கள் சமூகம் குறித்தோ அதன் நிலைப்பாடு குறித்தோ அதன் மனவெளி குறித்தோ இந்த் கல்வி எதனையும் தந்துவிடவில்லை. எனது கல்விஇ பாடம்இ பரீட்சைஇ படிப்பு எல்லாமே முழுக்க முழுக்க எனக்கெதிராக இருக்கிறது. புதிய வித்தில் எழுதப்படுகிற விடைகளை நிராகரிக்கிறார்கள்.

ஆளுமையுள்ள மாணவர்களை தராமல் காலனித்துவத்திற்கான கூலிகளைத்தான் எங்கள் கல்வி உருவாக்குகிறது. வெறும் பண்டிதத்தனத்துடன் வேற்றுக் கிரகக்கதைகளைத்தான் சொல்லுகிறர்hகள். நான் முழுமையாக என் நிலைப்பாட்டில் இருந்தே பேசுகிறேன். என் சக மாணவர்கள் குறித்து எனக்கு வெட்கமும் கவலையுமாக இருக்கிறார்கள். சமூகம் குறித்த புரிதலற்று அவர்கள் உழைக்கிற மெசின்களாக உருவாக்கப்படுகிறார்கள்.

இந்த நேர்காணல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்திருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்களில் குறிப்பிட்டவர்கள் இப்படித்தானிருக்கிறார்கள். அவர்களது நிலவரத்தை வெளியில் காட்டவே இந்த நேர்காணலை வெளியிட்டிருக்கிறேன். இது பேசாமலிருந்தவர்களின் சாட்சியாக இருக்கும் என நம்புகிறேன்.

deep said...

நன்றி. பேட்டியை விட பின்னூட்ட உரையாடல் நல்லா இருக்கு :-)

போரும் வாழ்வும்

வலைப்பதிவு பட்டியல்

உன்னதத்திற்கு வழங்கிய நேர்காணல்

-----------------------------------

நிந்தவூர் ஷிப்லிக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த
உரையாடலை வெளியிட்ட இலங்கை அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தமிழ் பத்திரிகையான தினகரன் தணிக்கை செய்து உரையாடலை வெளியிட்டுள்ளது. இது எமது உரையாடலை திசை திருப்ப நடந்த செயலாகும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்தி வருகின்ற அடக்குமுறைகள் யுத்தத்திற்காக அரசு வெலவழிக்கும் பணங்கள் முஸ்லீம்கள் அப்பாவி சிங்கள மக்கள் முதலியோர் பாதிக்கப்படுவது முதலிவை பற்றி பேசிய பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் கேவலமான நடவடிக்கை. இது மாதிரியான செயல்கள் ஊடக சுகந்திரத்திற்கும் உன்மைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.

தீபச்செல்வன்

சித்திராங்கனுக்கு வழங்கிய நேர்காணல்

தளவாய்சுந்தரத்திற்கு வழங்கிய நேர்காணல்